புதுதில்லி:
இந்தியாவின் முதற்பெரும் பணக்காரராக இருந்த ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர்முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டு ஆசிய கண்டத்திலேயே பெரும்பணக்காரராக மாறினார். உலகஅளவில் 11-ஆவது இடத்தில் இருந்து வந்தார்.
தற்போது உலகின் முதல் 10 பெரும்பணக்காரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.ஆரக்கிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் லாரி எலிசன் மற் றும் பிரான்சின் பிரான்கோயிஸ் பெடென்கோர்ட் மேயர் ஆகியோரை ஒரே நேரத்தில் பின்னுக்குத் தள்ளி 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.அவரது சொத்து மதிப்பு 6,450 கோடி டாலராக (சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்குஅமல்படுத்தப்பட்ட சூழலில், பெரும் பாலான நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்தன. ஆனால், இந்தக் காலத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ‘ஜியோ’ நிறுவனம் அபரிமிதமான லாபத்தை ஈட்டியது. பேஸ்புக் இன் கார்ப்பரேஷன், ஜெனரல் அட்லாண்டிக், சில்வர்லேக் பார்ட்னர், கேகேஆர் அண்ட் கோ, சவூதி அரேபியாவின் சாவ்ரின் வெல்த் பண்ட் ஆகிய நிறுவனங்களின் 1,500 கோடி டாலர்அளவுக்கு அந்நிய முதலீடுகளை ஈர்த்தது. இதன் காரணமாக, குறுகியகாலத்தில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.