புதுதில்லி:
இந்தியப் பொருளாதார மதிப்பை 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக (5 லட்சம் கோடி டாலர்) உயர்த்துவோம் என்று பிரதமர்மோடி, பாதுகாப்புத்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் உட்பட பலரும் ஜம்பம் அடித்து வருகின்றனர்.ஆனால், அதற்கான வாய்ப்பேஇல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சி. ரங்க ராஜன் அதிரடியாக கூறியுள்ளார்.தில்லியில் ‘ஐபிஎஸ் - ஐசிஎப்ஏஐ பிசினஸ் ஸ்கூல்’ கல்லூரியில் நடந்தநிகழ்ச்சி ஒன்றில் சி. ரங்கராஜன்கலந்து கொண்டு உரையாற்றி யுள்ளார். அதில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:
தற்போதைய நிலையில், நமது நாட்டின் பொருளாதார மதிப்பு 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக இருக்கிறது. இதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டுமானால், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 9 சதவிகித (ஜிடிபி) வளர்ச்சியை நாம்கொண்டிருக்க வேண்டும். எனவே, 5 டிரில்லியன் டாலர்இலக்கை அடைய முடியுமா? என்றால், அந்த கேள்விக்கே இடமில்லை என்பதுதான் உண்மை.கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொருளாதார வளர்ச்சி மிக மந்தமாக இருக்கிறது. 2019-20 நிதியாண்டிலும் 6 சதவிகிதத்திற்கு குறைவாகவே வளர்ச்சி இருக்கும். 2019-20இல் வேண்டுமானால் 7 சதவிகித வளர்ச்சியை எதிர்பார்க்க லாம். எனினும் அது போதாது. வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் தனிநபர் வருவாய் 12 ஆயிரம் டாலராக (சுமார் 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்) இருக்க வேண்டும். ஆனால், நமது நாட்டில் அது 1,800 டாலராக (சுமார் 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய்) மட்டுமே இருக்கிறது. தனிநபர் வருவாயில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். எனவே, வளர்ந்த நாட்டின் தனிநபர் வருவாய் இலக்கை அடையஒவ்வொரு ஆண்டும் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி தேவை. அவ்வாறு 9 சதவிகித வளர்ச்சியைப் பெற்றாலும், 12 ஆயிரம் டாலர் வருவாயை எட்டுவதற்கே நமக்குக் குறைந்தது 22 ஆண்டுகள் ஆகும்.” இவ்வாறு சி. ரங்கராஜன் தெரி வித்துள்ளார்.