tamilnadu

img

நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை.. கிரிசில், மூடிஸ் போன்ற கடன் தரமதிப்பீட்டு நிறுவனங்களும் கூறுகின்றன...

புதுதில்லி:

தொழில்துறை உற்பத்தி  குறியீடு 10.4% சரிவு..!
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி விகிதம் 2019 ஜூலையில் 4.9 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், இதுவே 2020 ஜூலையில் 10.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.சுரங்கம் மற்றும் மின்சார உற்பத்திக் குறியீடு முறையே 13 சதவிகிதம் மற்றும் 2.5 சதவிகிதம் என உற்பத்தித்துறை குறியீடு ஒட்டுமொத்தமாக 11.1 சதவிகிதமும் சரிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 118.8 சதவிகித வீழ்ச்சி ஆகும்.

நடப்பாண்டில், இந்தியப் பொருளாதாரம் (ஜிடிபி) வளர்ச்சியடைய வாய்ப்பு இல்லை என்று, ‘கிரிசில்’, ‘மூடிஸ்’ போன்ற சர்வதேச ஆய்வுநிறுவனங்களும் கணிப்பு வெளியிட்டுள்ளன.நடப்பு நிதியாண்டின் முதல் (ஏப்ரல் - ஜூன்) காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 23.9 சதவிகிதமாக மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சிஅடைந்திருப்பதாக இந்திய அரசின்புள்ளியியல் அலுவலக அறிக்கை அண்மையில் உறுதிப்படுத்தி இருந்தது. இதையொட்டி, இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு 2020-21 நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடையும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’(Fitch Ratings) நிறுவனமும், 11.8 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று‘இந்தியா ரேட்டிங்ஸ்’ (India Ratings)நிறுவனமும் கணிப்புக்களை வெளியிட்டன.
நுகர்வு உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி குறிகாட்டிகள், மிகவும் பலவீனமான பொருளாதார மீட்சியைநோக்கிச் செல்கின்றன. அதோடுகொரோனா தடுப்பூசி கண்டுபிடிக் கும் வரையில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவது கஷ்டம் என ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் கொரோனா பாதிப்பால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று ‘கிரிசில்’ நிறுவனம் தனது ஆய்வில் எச்சரித்துள்ளது. 1950ஆம் ஆண்டுக்குப் பிறகு இந் தியா சந்திக்கும் மிக மோசமான வீழ்ச்சி இதுதான் என ‘கிரிசில்’ நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. மற்றொரு புறத்தில், ‘மூடிஸ்’ நிறுவனமும் தன் பங்கிற்கு 11.5 சதவிகிதம் அளவிற்கு இந்தியப் பொருளாதாரம் சரியலாம் என கணித்துள்ளது.

*******************************

பொருளாதார சுதந்திரக் குறியீடு:  105-ஆவது இடத்தில் இந்தியா!

ஒரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், கொள்கைகள், சந்தையில் நுழையும் திறன், தனியார் சொத்துகள்மீதான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில், கனடாவின் ‘பிரேசர் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச அளவிலான பொருளாதாரச் சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்கான பொருளாதார சுதந்திர ஆய்வறிக்கையை ‘பிரேசர் இன்ஸ்டிடியூட்’ தற்போது வெளியிட்டுள்ளது. இதில், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 162 நாடுகளில், இந்தியா மிக மோசமாக105-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் இந்தியா 26 இடங்கள் சரிவைச் சந்தித்துள்ளது.இந்திய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறியீட்டு அளவு 8.22 சதவிகிதத்திலிருந்து 7.16 சதவிகிதமாகவும், சொத்து உரிமை குறியீடு 5.17 சதவிகிதத்திலிருந்து 5.06 சதவிகிதமாகவும், சர்வதேச வர்த்தக குறியீடு 6.08 சதவிகிதத்திலிருந்து 5.71 சதவிகிதமாகவும், கடன் விதிமுறைகுறியீடு 6.63 சதவிகிதத்திலிருந்து 6.53 சதவிகிதமாகவும் சரிந்துள்ளது.

*******************************

மற்றுமொரு பொருளாதார தொகுப்பு அவசியம்...  மத்திய அரசுக்கு ஐஎம்எப் அறிவுரை

பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட உலக நாடுகளிலேயே இந்தியாதான் மிகமோசமான பொருளாதாரப் பாதிப்பைக் கொண்டநாடாக உள்ளது. இதனை மீண்டும் வளர்ச்சியை நோக்கி உந்தித்தந்த வேண்டுமானால், கடந்த ஏப்ரலில் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடிபொருளாதாரத் தொகுப்பைப் போல மற்றுமொரு பொருளாதாரத் தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.“இந்தியாவுக்கு கூடுதலாக பொருளாதார ஊக்கத்தொகை தேவை என்று நாங்க கருதுகிறோம். முக்கியமாக குறைந்த வருமானம்பெறும் தொழிலாளர்கள், விளிம்புநிலை குடும்பங்களை கவனத்தில் வைத்து சுகாதாரம், உணவு, வாழ்வாதார ஆதரவுக்கு பொருளாதார ஊக்கம் தேவை” என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்புத்துறை இயக்குநர் கெரி ரைஸ் கூறியுள்ளார்.