tamilnadu

img

6.5 லட்சம் கொரோனா பரிசோதனை உபகரணங்கள்... சீனாவிலிருந்து இந்தியா வருகிறது

தில்லி 
இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு இரண்டாம் கட்ட ஊரடங்கு விதித்துள்ளது. இந்த ஊரடங்கு மே மாதம் 3-ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், இதுவரை கொரோனவால் 12,346 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 423 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளன.  

கொரோனா பரிசோதனை முடிவுகளைத் துரிதமாக அறிந்துகொள்ள இந்தியாவிடம் நவீன மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் இல்லை என்பதால் கொரோனவிலிருந்து மீண்டு பாடம் கற்றுள்ள சீன அரசிடம் பரிசோதனை உபகரணங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஆர்டர் செய்தது. கடந்த வாரம் இந்தியாவிற்கு வரவிருந்த உபகரணங்கள் கொரோனா மூலம் அதிக சேதாரத்தைச் சந்தித்துள்ள அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டன என கூறப்பட்டது.

இதனால் இந்தியாவுக்கு உபகரணங்கள் வர காலதாமதம் ஏற்பட்ட நிலையில், சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி ஆன்டிபாடி பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஆர்.என்.ஏ. பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள், சீனாவின் குவாங்சூ விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன எனக் கூறியுள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் இந்தியா வந்திறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.