புதுதில்லி:
சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி 78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மலேசிய நாட்டிற்கான ஏற்றுமதியும் 76 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மறுபுறத்தில், அமெரிக்கா, பிரிட் டன் உள்ளிட்ட நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி மைனஸ்60.2 சதவிகிதம் அளவுக்கு சரிந்தநிலையில், ஜூலையில் மைனஸ்10.2 சதவிகிதம் என்ற அளவுக்குமீட்சி பெற்றது.இந்நிலையில், பொதுமுடக் கத்தில் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வரும்நிலையில், நாட்டின் ஏற்றுமதியும்அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. ஏற்றுமதி வீழ்ச்சியிலிருந்து, மே மாதத்தில் 50 சதவிகிதம் அளவிற்கும்; ஜூன் மாதத்தில் 30 சதவிகிதம் அளவுக்கும் மீட்சி ஏற் பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதத் தில் நிலைமைகள் முற்றிலும் மாறி, சீனாவுக்கான ஏற்றுமதி 78 சதவிகிதம் அளவிற்கும், மலேசியாவுக்கான ஏற்றுமதி 76 சதவிகிதம் அளவிற்கும் அதிகரித்துள்ளது.அதேநேரத்தில், ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி,மைனஸ் 53.2 சதவிகிதம் அளவிலும், பிரிட்டனுக்கான ஏற்றுமதி மைனஸ் 38.8 சதவிகிதமும், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மைனஸ் 11.2 சதவிகிதம் அளவிற்கும், பிரேசிலுக்கான ஏற்றுமதி மைனஸ் 6.3 சதவிகிதமும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.