world

img

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடத்துக... உலக சுகாதார அமைப்பிடம் சீனா வலியுறுத்தல்....

பெய்ஜிங்:
கொரோனா வைரசின் தோற்றம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பிடம் சீனா வலியுறுத்தியுள்ளது. 

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவைரசின் தோற்றம் குறித்த ஆய்வு உலகசுகாதார அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது. சீனாவில்தான் கொரோனா வைரஸ் தோன்றியது என்ற அமெரிக்காவின் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை உலக சுகாதார அமைப்பு ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா,  உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்படும் என்று கூறி மிரட்டல் விடுத்தது.

சீனாவிலிருந்து கொரோனா பரவியதற்கான சான்று இல்லை 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் சீனா நாட்டுக்குசென்று சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட னர்.  இதன்பின்னர்  சீனாவில் எந்தவொரு விலங்கினத்தில் இருந்தும் கொரோனா வைரசானது பரவியதற்கான சான்று எதுவும் இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்தது.சீனாவின் வூகான் நகரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்புக்கான திட்ட தலைவர் பீட்டர் பென் எம்பேரக் கூறுகையில், ஆய்வகத்தில் இருந்து மனித இனத்திற்கு வைரசானது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது சாத்தியமில்லை. நாங்கள் வூகானின் வைராலஜி அறிவியல் மையத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.  ஆய்வகத்தில் இருந்து வைரசானது தப்பி வெளியே செல்வதற்கான சாத்தியம் இல்லை.  ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவும் சம்பவங்களும் மிக அரிது என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறினார்.

இந்த முடிவுகள் வெளியான பின்னர் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், கொரோனா வைரசின் பிறப்பிடம்அமெரிக்காவில் இருந்து தோன்றியத ற்கான சான்றுகளை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பு அதிகாரி வாங் வென்பின் கூறும்பொழுது, சீனாவை எடுத்துக்காட்டாக கொண்டு, கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி கண்டறியும் விவகாரத்தில் அமெரிக்காவும் நல்ல விதத்தில்,அறிவியல் அடிப்படையில் மற்றும் ஒத்துழைக்கும் வகையில் நடந்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களை அமெரிக்கா வரவேற்கும் என்று கூறியுள்ளார்.சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை தொற்றியலாளர் ஜெங் குவாங் கூறுகையில், கொரோனாவின் பிறப்பிடம் பற்றி கண்டறியும் சர்வதேச முயற்சிகளின் கவனம் தற்பொழுது அமெரிக்காவின் மீது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.