tamilnadu

img

25 000 பள்ளி குழந்தைகள் போதைக்கு அடிமை - அதிர்ச்சித் தகவல்

தலைநகர் தில்லியில் 25000 பள்ளிக் குழந்தைகள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல்  வெளியாகி உள்ளது.
நாட்டில் போதைப்பழக்கம் பள்ளிக் குழந்தைகளிடம் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில்  நாடாளுமன்ற மேலவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி.யான டி. சுப்பராமி ரெட்டி கூறியதாவது:-  டெல்லியில் 25 ஆயிரம் பள்ளி குழந்தைகள் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர்.  ஆனால் காவல் துறையினர் இந்த விவகாரத்தில் கண்டும் காணாமலும் உள்ளனர் என கூறினார். தில்லி மட்டுமின்றி வட இந்தியா முழுவதும் போதை பொருள் எளிதில் கிடைக்கிறது.  ஒன்றுமறியாத குழந்தைகளின் வாழ்வை அழிக்கிறது.  போதை பொருட்களுக்கு அடிமையானோரில் 83 சதவிகிதம் பேர் கல்வி அறிவுடையோர்.

ஆனால் மாபியா கும்பல் தலையீட்டால் இந்த விவகாரத்தினை மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.  இதுபற்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட் மற்றும் இமாசல பிரதேச முதல்வர்கள் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.  இந்தியாவுக்குள் பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் வழியே போதை பொருள் கடத்தப்படுகின்றன.  இது கவனத்தில் கொள்ள வேண்டிய தீவிர விசயம்.  இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேசிய புலனாய்வு முகமையுடன் வேறு சில அமைப்புகளும் தங்களுக்குள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.