இரட்டை இஞ்சின் “குஜராத் மாடல்”
பழுது பார்க்கப்படாத ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி
காந்திநகர் குஜராத் மாநிலம் வதோதரா மாவட் டத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த தில் வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்து 10 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயங்க ளுடன் மீட்கப்பட்டுள்ளனர். வதோதராவில் உள்ள மஹிசாஹர் ஆற்றில் கட்டப்பட்டுள்ள கம்பீரா பாலம் மத்திய குஜராத் மற்றும் செளராஷ்டிராவை இணைக்கும் முக்கிய மான அதிகப் போக்குவரத்து நிறைந்த பால மாக இருக்கிறது. புதனன்று காலை 7.45 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அப்போது பாலத்தில் சென்றுகொண்டிருந்த இரண்டு லாரிகள், ஈகோ வேன், பிக்-அப் வேன், ஆட்டோ என ஐந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. பாலம் இடித்து விழுந்த சில மணி நேரத்தில் வந்த தீயணைப்பு படையினர் வாகனங்களில் சிக்கியவர்களின் உடல்களையும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாலம் இடிந்து விழுவதற்கு முன் பெரும் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரி வித்துள்ளனர். இந்தப்பாலம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. இந்தப் பாலம் நீண்ட காலமாக மோசமான நிலையில் இருந்தது. புதிய பாலம் அமைக்க வேண்டு கோள் விடுத்தும் பாஜக அரசு அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று உள்ளூர் மக்கள் அரசின் மீது குற்றம் சாட்டி யுள்ளனர். பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி களை முறையாக முன்னெடுத்து, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய பாலத்தை கட்டும் பணியை முன்னெடுத்தி ருந்தாலும் இந்த விபத்து நடத்து இருக்காது என கூறப்படுகிறது. விசாரணைக்கு உத்தரவு இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாலம் இடிந்தது குறித்து உடனடி விசாரணை நடத்த முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, ஆனந்த் மற்றும் வதோதராவை இணைக்கும் கம்பீரா பாலத்தின் 23 ஸ்பேன்களில் ஒன்று உடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படகுகள் மற்றும் நீச்சல் வீரர்களுடன் தீயணைப்புப் படை, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் இணைந்துள்ளது. இந்த விபத்து குறித்து உடனடி விசாரணை நடத்த சாலைப் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.