tamilnadu

img

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்த்திடுக - சிபிஎம் கோரிக்கை

நாமக்கல், ஜூன் 25- திருச்செங்கோடு அருகே உள்ள  மல்லசமுத்திரம் பேரூராட்சியில்  குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியதாவது, மல்லசமுத்திரம் பேரூராட்சி 11வது வார்டில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு கடந்த மூன்று  மாத காலமாக குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டு வருகிறது.

இதனைத்தொ டர்ந்துஅப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை அணுகியபோது ஆழ்துளை கிணறுகளை சரி செய்த பின்னர்தான் தங்களது பகுதிக ளுக்கு குடிநீர் கிடைக்கும் என்று  அதிகாரிகள் கூறியுள்ளனர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் தானாக முன் வந்து ஊரின் சார்பில் வீடுவீடாக வசூல் செய்து ரூ.17 ஆயிரத்து 500 செலவில் சொந்தமாக ஆழ்துளை கிணற்றை சுத்தப்படுத்தி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தனர். இதைய டுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆள்துளை கிணற்றில் உள்ள புதிய  மோட்டாரை கழற்றிவிட்டு, பழைய  மோட்டாரை மாட்டிவிட்டுசென்றனர்.  இதனால், நீரேற்றம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு தேவையான குடிநீர் அப்பகுதி மக்களுக்கு கிடைக் காமல் பெரும் சிரமத்தை சந்தித்து  வருகின்றனர். காவிரி குடிநீரும் மாதத்திற்கு ஒரு முறைதான் வரு கிறது.

இதனால் அப்பகுதியில் குடிநீர் விலைக்கு வாங்கி பயன்ப டுத்த வேண்டிய நிலை உருவாகி யுள்ளது. மேலும், கடந்த நான்கு வருடத்திற்கு முன்னதாக ரூ. 13  லட்சம் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பி டம் கட்டப்பட்டது.தற்போது  அதனை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் திறந்தவெளி  கழிப்பிடத்தை பயன்படுத்துகின்ற னர். எனவே சீரான குடிநீரும், பொதுக் கழிப்பிடத்தை சரி செய்திட வும், காவிரி குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட   கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டுள்ளது  முன்னதாக, இம்மனுவினை மார்க் சிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் ஒன் றிய செயலாளர் சு.சுரேஷ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலை வர் கோவிந்தன், அம்மாபட்டி கிளை செயலாளர் வீ.சுகுமார் மற்றும் அப்ப குதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.