திருச்செங்கோடு, ஜூன் 5- எலச்சிபாளையம் அருகே முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் உத்தரவின்பேரில், ஊராட்சி ஒன்றிய நிர் வாகத்தின் மூலம் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் பொதுமக்களிடம் கொரோனா தொற்று ஏற் படாத வண்ணம் கைகளை சுத்தமாகக் கழுவுதல், வெளியே வரும்போது முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பிரச்சாரம் ஒலிபெருக்கி மூலம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், முகக்கவசம் அனியாத நபர் களுக்கு ரூ. 100 வீதம் 10 பேருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், வரதராஜ், ஊராட்சி செயலாளர் கருணாகரன், வருவாய் ஆய் வாளர் சாந்தி, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராம ஜெயம், கிராம நிர்வாக அலுவலர்கள் சத்யராஜ், பிரபு, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.