tamilnadu

நாமக்கல்லில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல், ஜன. 27- நாமக்கல் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற் கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  ஜன.31 ஆம் தேதியன்று(வெள்ளி) நடைபெற வுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜன.31ஆம் தேதியன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.