பள்ளிபாளையம், ஏப்.10-நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் பகுதியில் செவ்வாயன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் பகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இந்த பிரச்சாரத்திற்கு பள்ளிபாளையம் விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றியத் தலைவர் எஸ்.கதிர்வேல் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சம்பூர்ணம், ஒன்றிய துணைத்தலைவர் திருமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பிரச்சாரத்தை நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் துவக்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி, ஒன்றிய குழு நிர்வாகிகள் கருப்பண்ணன், பூபதி, மாவட்ட துணைச் செயலாளர் கே. மூர்த்தி உட்பட ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.இப்பிரச்சாரம் அம்மாசிபாளையம், ராமநாதன்புதூர், தொட்டியபாளையம். மலைபாளையம், ஐந்துபனை, காடச்சநல்லூர், கிழக்கு தொட்டிபாளையம், வெள்ளிகுட்டை, தார்காடு, பள்ளிபாளையம்,அக்ரஹாரம், களியனூர், எம்ஜிஆர் நகர், ஆலம்பாளையம், நல்லா கவுண்டம்பாளையம், ஓடபள்ளி, வண்ணாம்பாறை, பாப்பம்பாளையம், பாரதிநகர், கொக்கராயன்பேட்டை ஆகிய பகுதிகளில் அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.