குமரி மாவட்டம் குலசேகரத்தில் ஒன்றிய அரசின் விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராகவும் புதிய மின்சார சட்டத்தை கைவிட கோரியும் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகவும் தோழர் சதீஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரெவி கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் பி. நடராஜன், ஸ்டாலின் தாஸ், செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.