tamilnadu

img

புத்தூர் கல்லூரியில் விளையாட்டு விழா

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு கல்லூரி முதல்வர் லெட்சுமி தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் பிரபாகரன் ஆண்டறிக்கை வாசித்தார்.  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா மைய இயக்குனர் முனைவர் வெங்கடாஜலபதி பேசினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் தணிக்கைவேலன், உடற்கல்வி இயக்குநர் சவுந்தர்ராஜன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.