கிருஷ்ணகிரி, ஏப். 1- அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விளையாட்டு விழா கல்விகுழும நிறுவனர் மு.தம்பிதுரை தலை மையில் வெள்ளியன்று (மார்ச் 31) நடை பெற்றது. அப்போது அவர் பேசுகையில், “வேலைக்குச் சென்றாலும் சிறிது நேரமாவது ஒதுக்கி விளையாட வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் வாழ்க்கையும் ஆரோக்கியமாக அமையும்” என்றார். உலகக்கோப்பை கால்பந்து மற்றும் ஒலிம்பிக் போட்டி முன்னாள் நடுவர் சங்கர் கோமலேஷ்வரன் கலந்து கொண்டு தேசிய, மாநில அளவில் வெற்றிபெற்ற மாண வர்களுக்கு பரிசு, கோப்பைகளை வழங்கினார். இதில் எம்.ஜி.ஆர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகு வாக கவர்ந்தன. முன்னதாக பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் வரவேற்றார்.