districts

img

கேசா டி மிர் பள்ளியில் விளையாட்டு விழா

இராஜபாளையம்,பிப்.15- இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 13 ஆவது  விளையாட்டு விழா பள்ளித்தாளாளர் .வைமா திருப்பதி செல்வன் தலைமை யில்  நடைபெற்றது. பள்ளியின் நிர்வாகத் துணை முதல்வர் பானுபிரியா வர வேற்றார். இலட்சுமி மருத்துவமனையின் நிறுவனர் இராஜா குணசீலன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முதுநிலை முதல்வர்  அருணாதேவி  ஒலிம்பிக் கொடியினையும், இலட்சுமி என்ஜினியரிங் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் இரவிசங்கர் பள்ளிக் கொடியையும் ஏற்றினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  ஆசி ரியை ஜீவலதா நன்றி கூறினார்.