districts

img

கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் விளையாட்டு விழா

அறந்தாங்கி. ஆக.7 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கராத்தே பிர தர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 23 ஆவது ஆண்டு  விழாவின் தொடக்கமாக, பள்ளி மாணவ, மாணவி யர்களுக்கான விளையாட்டு போட்டிகள், அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதா னத்தில் நடைபெற்றது.  விழாவிற்கு கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்ட ளையின் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கமாக  காரைக்குடி சாலையில் ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தை,  அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் தொடங்கி வைத்தார்.  அங்கு தமிழன் கிரிக்கெட் அசோசியேஷன் தலை வர் டான் சத்தியமூர்த்தி விளையாட்டுப் போட்டிகளைத்  தொடங்கி வைத்தார். போட்டிகளில் 27 அரசு பள்ளிகள்  மற்றும் 28 தனியார் பள்ளிகள் என மொத்தம் 55 பள்ளி களைச் சேர்ந்த 1100 மாணவ, மாணவியர் பங்கேற்ற னர். ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டு தல், குண்டெறிதல், வட்டெறிதல், சிலம்பப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  போட்டிகளில் அதிக வெற்றிப் புள்ளிகளைக் குவித்த அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் பள்ளி மற்றும் குரும்பக்காடு லாரல் மெட்ரிக்  பள்ளி மாணவியர் கே.பி.ஸ்போர்ட்ஸ் சுழற்கோப்பையை  தட்டிச் சென்றனர். கோட்டாட்சியர் சொர்ணராஜ் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுககளை வழங்கினார்.