மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக்களின் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதே, பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்று ஓய்வுபெற்ற நீதிபதியும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான கோல்சே பாடில் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ‘ரேலாப்ஸ் டெக்னாலஜீஸ்’ எனும் நிறுவனம், ‘மிஸ்ஸிங் வோட்டர்ஸ் ஆப்’எனும் செயலியை உருவாக்கியுள் ளது. இதன்மூலம், மக்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதைக் கண்டறிய முடியும்.அத்துடன் பெயர் விடுபட்டவர்களை, மீண்டும் இணைக்கவும் முடியும். புதிய வாக்காளர்களும், தங்கள் பெயரை இந்த செயலி மூலம் வாக்கா
ளர் பட்டியலில் இரண்டு நிமிடங்களில் இணைத்துக் கொள்ள முடியும்.
இதனிடையே, ‘ரேலாப்ஸ் டெக் னாலஜீஸ்’ நிறுவனம் அண்மையில் ‘மிஸ்ஸிங் வோட்டர்ஸ் ஆப்’ செயலிமூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது.அந்த ஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே, மும்பைஉயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் செயலாளருமான கோல்சேபாடில், இஸ்லாமியர்கள், தலித்துக்கள் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட் டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
“மகாராஷ்டிராவில் மட்டும் 39 லட்சத்து 27 ஆயிரத்து 882 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மகாராஷ்டிர மாநில மொத்த வாக்காளர் களில் 4.6 சதவிகிதம் பேர்கள் ஆவர்.மேலும் இவ்வாறு நீக்கப்பட்டவர் களில் தலித்துக்கள் மட்டும் 17 லட்சம் பேர். இஸ்லாமியர்கள் எண்ணிக்கை10 லட்சம். இந்த வாக்காளர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற அடிப்படையிலேயே பெயர் களை நீக்கியிருக்கிறார்கள். இதேபோல பாஜகவுக்கு எதிரான வாக்காளர்கள் நாடெங்கும் நீக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என்று கோல்சே பாடில் கூறியுள்ளார்.