மும்பை:
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதனொரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ளஆஷா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ராகுல் பேசியிருப்பதாவது:
பொருளாதாரத்தை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறிஜி.எஸ்.டி. வரியை அறிமுகம் செய்தார்கள். ஆனால், சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து விட்டார்கள். இன்று நாட்டின் பொருளாதாரத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண் டுள்ளது.நாட்டில் 2 ஆயிரம் முக்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. தொழில்துறை மிக மந்தமான முறையில் இருக்கிறது.ஆனால், அம்பானி- அதானி போன்ற 15 தொழில் அதிபர்களுக்கு ரூ. 5லட்சம் கோடி வரை வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வேலையில்லா திண்டாட்டம் மோசமான நிலையை எட்டி உள்ளது. ஆனால், இதுபற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை.வேலையின்மையைப்பற்றி இளைஞர்கள் கேட்டால் நிலவைக்காட்டி, விண்கலம் அனுப்பியிருப்பதாக பெருமை பேசி, பிரச்சனையைத் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். நிலவுக்கு விண்கலம் அனுப்பினால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து விடுமா?பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் பொதுமக்களின் முக்கியமான பிரச்சனைகளை திசை திருப்புவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இவ்வாறு ராகுல்காந்தி பேசியுள்ளார்.