tamilnadu

img

பெருமுதலாளிகளுக்காக, முதலாளிகள் புடைசூழ பதவியேற்ற பெருமுதலாளி!

வாஷிங்டன், ஜன. 21 - உலக நாடுகளைத் தனது மேலாதிக்கத்தின் மூலமாக மிரட்டி சுரண்டி வரும் அமெரிக்கா வின் ஜனாதிபதியாக மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலாளியான டொனால்டு டிரம்ப், ஜனவரி 20 அன்று உள்ளூர் நேரப்படி மதியம்  12 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் மட்டுமின்றி உலகப் பெருமுதலாளிகளான ‘அமேசான்’ சிஇஓ ஜெப் பெசோஸ், அமெரிக்காவின் திறன்துறை தலைவராக நியமிக்கப்படவுள்ள உலகின் ‘நம்பர் ஒன்’  முதலாளியும் தீவிர வலதுசாரி ஆதரவாளரு மான எலான் மஸ்க், முகநூல், இன்ஸ்டா கிராமின் தாய் நிறுவனமான மெட்டா-வின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோர் புடைசூழ பதவியேற்று முடித்துள்ளார். அப்போது பேசிய அவர், தனது ஆட்சி உண்மையிலேயே அமெரிக்காவின் பொற் காலமாக இருக்கும். இனிமேல் அமெரிக்கா விற்கு வீழ்ச்சி இருக்காது என்று கூறியுள்ளார். உண்மையில் இந்த பொற்காலம் என்பது அமெரிக்காவிற்கு/அமெரிக்க மக்களுக்கா னது அல்ல, அமெரிக்க பெருமுதலாளி களுக்கும், பிற்போக்குவாதிகளுக்கும், தீவிர வலதுசாரிகளுக்குமானது என்பதை பதவியேற்றவுடன் பிறப்பித்த முதல் நாள் உத்தரவுகளிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் டிரம்ப்.

80 உத்தரவுகள் 

முதல் நாளில் டிரம்ப் சுமார் 80-க்கும்  மேற்பட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டுள் ளார். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ள லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு வெளியேற்றும் உத்தரவு, அமெரிக்காவில் அகதிகளுக்கு பிறக்கும் குழந்தைக்கு இனி குடியுரிமை வழங்கப் படாது என்ற உத்தரவு ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ள டிரம்ப், மெக்ஸிகோவுட னான அமெரிக்காவின் தெற்கு எல்லையில் தேசிய அவசர நிலையையும் அறிவித்துள்ளார். 2021 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றி அமெரிக்காவில் எரிபொருள் அவசர நிலையை அறிவித்துள்ளார். இதன் மூலம் எண்ணெய் மற்றும் ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள் வரம்பற்ற முறையில் எண்ணெய் எடுக்கலாம், சுரங்கங்கள் தோண்ட லாம் என்ற நிலை உருவாகியுள்ளது.  இவற்றுடன் 2021 தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது ஆதரவாளர்கள் மூலம் கலவரத்தை உருவாக்கி ஆட்சியை கவிழ்க்க  டிரம்ப் திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்கா வின் கேபிடல் ஹாலில் கலவரத்தில் ஈடுபட்டு கைதாகி இருந்த 1,500-க்கும் மேற்பட்ட தன ஆதரவாளர்களுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பையும் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அரசு ஊழியர்கள், வீட்டில் இருந்தே பணிசெய்யும் (work from home) முறையினையும் ரத்து செய்துள்ளார்.  

இவை எல்லாவற்றையும் தாண்டி, அமெரிக்காவில் ஆண் - பெண் ஆகிய இரண்டு பாலினத்தை மட்டுமே அங்கீகரிப்பதாகவும், பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகளை தடை செய்வதாகவும் தெரிவித்து, தனது கொடூரமான பிற்போக்குத் தனத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் நிதியுதவியைப் பெறும் உலக சுகாதார மையம், கொரோனா உள்ளிட்ட காலங்களில் முறையாக செயல்படவில்லை என குற்றம் சுமத்தி, அதனால் உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளார். டிரம்ப் முதல் முறை ஜனாதிபதியாக இருந்த போதும் இவ்வாறு அமெரிக்கா வெளி யேற்றியது. இந்த முடிவால் அமெரிக்கா விற்கே இழப்பு என உலக சுகாதார மையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘பிரிக்ஸ்’ நாடுகள், டாலருக்கு மாற்றான நாணயத்தை வர்த்தகத்திற்கு பயன்படுத்த முடிவு செய்தால், அவர்கள் மீது 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.  80 இடங்களில் போராட்டம்  இவ்வாறு பதவி ஏற்ற தினத்தில், தனது தீவிர வலதுசாரி மற்றும் முதலாளித்துவ ஆதரவை உத்தரவுகளாக டிரம்ப் வெளியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு எதிராக 40 அமெரிக்க மாநிலங்களில் சுமார்  80-க்கும் மேற்பட்ட நகரங்களில், பல்லா யிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளனர். வாஷிங்டன் டிசி, நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட்லேண்ட், சியாட்டில், அட்லாண்டா, சார்லோட், மாண்ட்கோமெரி, சிகாகோ, ஹூஸ்டன், நியூ ஆர்லியன்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் செயல்படும் சோசலி சம் மற்றும் விடுதலைக்கான கட்சி, தொழிற்சங்கங்கள், பாலஸ்தீன இளைஞர் இயக்கம், அமெரிக்காவின் ஜனநாயக சோச லிஸ்டுகள், மக்கள் மன்றம், நிறவெறிக்கு எதிரான கலைஞர்கள் உள்ளிட்ட பல  ஜனநாயக அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத் தை ஒருங்கிணைத்துள்ளன.