சேலம், ஜன.21- தலேமா எலக்ட்ரானிக் நிறுவனத் தின் ஊழியர் விரோதப்போக்கைக் கண்டித்து, மத்திய தொழிற்சங்கங் கள் சார்பில் உண்ணாவிரத இயக்கம் நடைபெற்றது. சேலம் மாநகரில் இயங்கி வரும் தலேமா எலக்ட்ரானிக் நிர்வாகம், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சட்ட விரோதமாக லேஅப் நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ஊதிய ஒப்பந்தங்களில் உள்ள வரு டாந்திர ஊதிய உயர்வு, விடுமுறை கள் மற்றும் பொங்கல் முன்பணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்காமல் தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. லேஆப் மற் றும் ஆட்குறைப்புக்கு அரசு அனு மதி மறுத்து, அரசாணை பிறப்பித்த பின்னரும் லேஆப் நடவடிக்கையில் சட்ட விரோதமாக ஈடுபட்டு வருவது டன், ஆட்குறைப்பு மற்றும் ஆலை மூடல் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதனைக் கண் டித்து செவ்வாயன்று மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில், ஒருநாள் அடை யாள உண்ணாவிரத இயக்கம் நடை பெற்றது. சேலம் கோட்டை மைதா னத்தில் நடைபெற்ற இந்த இயக்கத் திற்கு, அண்ணா தொழிற்சங்க மாந கர் மாவட்ட துணைச்செயலாளர் ஏ.சபி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஏ.கோவிந்தன், தலைவர் டி.உதய குமார், துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன், மாவட்டத் தலைவர் டி. உதயகுமார், பொதுத்தொழிலா ளர் சங்க தலைவர் ஆர்.வெங்கடபதி, பொதுச்செயலாளர் பொன்.ரமணி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் சுந்தரபாண்டியன், ஐஎன் டியுசி மாவட்டச் செயலாளர் கார்த்தி கேயன், சிஐடியு தலேமா ஆலை சங்க செயலாளர் எஸ்.கோபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.