tamilnadu

img

பட்டியலினச் சிறுவனை அவமதித்தும் கொடூரமாகத் தாக்கியும் சித்ரவதை!

மதுரை, ஜன. 21 - மதுரை அருகே, பட்டியலினச் சிறுவனைக் கொடூரமாகத் தாக்கி யதோடு, சிறுநீர் கழித்தும், காலில் விழச்செய்தும் சித்ரவதைக்கு உள்ளா க்கியவர்கள் அனைவரையும் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 3 மாதங்களுக்கு முன்பு வீட்டின் மீது தாக்குதல் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், வாலா ந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட  சங்கம்பட்டி யை சேர்ந்த பாண்டியராஜன், ஈஸ்வரி இவர்களின் மகன் ஆதிசேஷன் (வயது 17). கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு சங்கம்பட்டி கிரா மத்தில் நடைபெற்ற கோவில் திரு விழாவில் சிறுவர்களுடன் சேர்ந்து ஆதி சேஷன் நடனம் ஆடியுள்ளார்.  அப்போது ஏற்பட்ட சிறிய மோதலில் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிசேஷனைத் தேடிச் சென்றவர்கள் அவர் அங்கு இல்லாத நிலையில் அவரது வீட்டின் கதவு களைச் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். தான் தாக்கப் படுவோம் என்ற அச்சத்தில் ஆதிசேஷன் வெளியூர் சென்று விட்டார். சில நாட் களுக்கு முன்பு ஆதிஷேசன் சங்கம்பட்டிக்கு திரும்பி வந்துள்ளார்.  சிறுநீர் கழித்தும், தாக்கியும் கொடூரச் சித்ரவதை இந்நிலையில் 16-01-2025 அன்று ட்ரம் செட் அடிக்கும் வேலைக்காக உசிலம்பட்டி சென்ற ஆதிசேஷனை சங்கம்பட்டியைச் சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டியன், மணிமுத்து, பிரம்மா, சந்தோஷ், நித்திஷ் ஆகிய 6 பேரும் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து சங்கம்பட்டி அருகே உள்ள முத்தையா கோவில் கண்மாய்கரையில் வைத்து கடுமையாக தாக்கியதோடு சிறுவன் மீது சிறுநீரும் கழித்துள்ளனர். மேலும் பிற்படுத்தப்பட்ட பகுதி யைச் சேர்ந்த 6 வயது சிறு வனின் காலில் விழ வைத்தும், தவழ்ந்து செல்ல வேண்டும் என்றும் சாதிய வன்மத்துடன் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் மீண்டும் ஊர்ப்  பக்கம் தலைகாட்டினால் கொலை செய்யாமல் விடமாட்டோம் எனவும் மிரட்டி அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து 17-01-2025  அன்று  தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு உசிலம்பட்டி நகர் காவல் நிலை யத்தில் ஆதிசேஷன்  புகார் அளித்துள் ளார். அதன் அடிப்படையில் 256(b), 351(2) மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 3(1)(r),3(1)(S) ஆகிய பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மணிமுத்து, நித்திஷ்  ஆகிய இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். சாதிய வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை தேவை! பட்டியலினச் சிறுவன் ஆதி சேஷனுக்கு இழைக்கப்பட்ட இந்த  காட்டுமிராண்டித்தனமான வன்கொடு மைச் செயலை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக் கிறது. பட்டியலின சிறுவனைக் கடுமை யாகத் தாக்கி வன்கொடுமைகள் செய்த குற்றவாளிகள் அனைவரை யும் உடனடியாக கைது செய்திட வேண்டும். ஆதிசேஷன் தாக்கப்பட்ட தோடு மட்டுமல்லாமல் சாதிய ரீதியாக இழிவுபடுத்தி வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது போன்ற சாதிய ரீதியான தாக்கு தல்கள் தொடர்வதை தமிழ்நாடு அரசும்,  காவல்துறையும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தடுத்திட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய  நிவாரணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு களை தமிழக அரசு உடனடியாக மேற் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.