நாமக்கல், ஜன.21- வங்கியில் இருந்து பணத்தை மோசடியாளர்கள் திருடாமல் இருக் கும் வகையில், உயர் தொழில்நுட் பத்தை பயன்படுத்தி வாடிக்கையா ளர்களுக்கு வங்கிகள் பாதுகாப்பு வழங்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே உள்ள அணி மூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வ மூர்த்தி என்பவர், திருச்செங்கோட் டில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத் துள்ளார். இந்த வங்கி கணக்கை போன் பே (PhonePe) பேமெண்ட் ஆப்பில் இணைத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பொருட்களை விற்பனை செய்யும் பூட்மோ (Boodmo) என்ற இணைய தளம் மூலம் டி-சர்ட் ஒன்றை வாங்கு வதற்காக போன் பே மூலம் பணம் செலுத்தியுள்ளார். இதன்பின் ஆர் டரை ரத்து செய்துவிட்டு பணத்தை திரும்ப வழங்குமாறு இணையத ளத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது விஸ்வமூர்த்திக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசியவர் தான் விற்பனை இணை யதளத்தின் அலுவலர் எனவும், ஒரு லிங்கை அனுப்பி உள்ளதாகவும், அதில் விவரங்களை பதிவு செய் தால் பணம் உடனடியாக திரும்ப அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மொபைலுக்கு வந்த லிங்கில் விஸ்வ மூர்த்தி நுழைந்துள்ளார். அடுத்த நிமிடத்திலேயே விஸ்வமூர்த்தி யின் வங்கி கணக்கில் இருந்த ரூ.96,895யை, அடையாளம் தெரி யாத நான்கு கணக்குகளுக்கு மாற் றப்பட்டுள்ளது. இந்த விவரம் உடன டியாக விசுவமூர்த்திக்கு மொபை லுக்கு குறுஞ்செய்தியாக வந்துள் ளது. வங்கி கணக்கில் இருந்து மோச டியாக பணம் திருடப்பட்டு விட்டது என்பதை உணர்ந்த விஸ்வமூர்த்தி உடனடியாக திருச்செங்கோட்டில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந் தியா வங்கியின் மேலாளருக்கு தொலைபேசியில் நடந்த சம்பவங் களை தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள் ளார். மறுநாள் வங்கிக்கு நேரில் சென்று எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளார். தொடர்ந்து வங்கி யின் உயர் அலுவலர்களுக்கும் பல முறை மின்னஞ்சல் மூலம் தமது பணத்தை மீட்டுத் தருமாறு கேட் டுள்ளார். ஆனால், அவருக்கு பணத்தை மீட்டுத்தர வங்கி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வங்கியின் மீது கடந்த 2024 ஜனவரி மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி பதி வீ.ராமராஜ், உறுப்பினர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோர் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கினர். அதில், வாடிக்கையாளரின் புகாரை பெற்றுக் கொண்ட வங்கி நிர்வாகம் தரப்பில் மோசடியாக பணத்தை திருடியவர்கள் மீது நட வடிக்கை மேற்கொண்டு குறைந்த பட்சம் முறையீட்டாளரின் பணத்தை மீட்க முயற்சி கூட செய்யாதது வங்கி புரிந்துள்ள சேவை குறைபா டாகும். மோசடியாக வங்கிக் கணக் கில் இருந்து பணம் திருடப்பட்டால் வங்கி நிர்வாகம், வாடிக்கையாள ருக்கு அந்த பணத்தை செலுத்த வேண்டும் என்று இம்மாத முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. வாடிக் கையாளரின் பணத்துக்கு இழப்பு ஏற்படாத வகையில் இணையதள பாதுகாப்புகளை வங்கி நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும், மோசடி யான பண பரிவர்த்தனையால் வாடிக் கையாளர் இழந்த பணத்தை, மோசடி செய்த நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண் டொன்றுக்கு 9 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும். சேவை குறை பாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரத்தையும் வழக்கு தாக் கல் செய்தவருக்கு வங்கி நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண் டும், என்று உத்தரவிடப்பட்டுள் ளது.