கிருஷ்ணா குளம் நீர் மடைமாற்றம்: எதிர்ப்பு
கிருஷ்ணா குளம் நீர் மடைமாற்றம்: எதிர்ப்பு கோவை, ஜன.21- கிருஷ்ணா குளம் நீரை மடைமாற்றம் செய்யும் நடவ டிக்கையை அரசு கைவிட வேண்டும், என பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிருஷ்ணா குளம் வழியாக செல்லும் தண்ணீர் மூலம், அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. ஜமீன் ஊத்துக்குளி, ராம பட்டினம், காளியாபுரம், முத்தூர், போடிபாளையம் உள் ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் ஆதார மாகவும் மற்றும் கால்நடை பயன்பாடு, விவசாயத் தேவைகளுக்காக கிருஷ்ணா குளத்திலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது. ஏற்கனவே கழிவுநீர் கலக்கப்படுவ தால் கிருஷ்ணா குளம் மாசடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான கிராமங்களின் வழியாக பாய்ந்து ஓடும் கிருஷ்ணா குளம் நீரை மடைமாற்றம் செய்து, சுத்திகரித்து தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அர சாணை வெளியாகியுள்ளது. இதுகுறித்த ஆலோச னைக் கூட்டம் செவ்வாயன்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், ஆணையர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், கிருஷ்ணா குளம் நீரை மடைமாற்றம் செய்வது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை அதிருப்தி அளிக்கி றது. இதற்கு விவசாயிகள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், கிருஷ்ணா குளம் நீரை மடைமாற்றும் செய்வதால் கால்நடைகள், விவசாய பூமி மற்றும் குடிநீர் ஆதாரம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இத்தகைய முடிவை அரசு கைவிட வேண்டும், என்றனர்.
ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம்
ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம் தருமபுரி, ஜன.21- பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் பகுதி களில் பராமரிப்புப்பணி மேற்கொள்வதால், ஜன.23 முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட் டம், பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சி கள், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சி கள், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஊராட்சி கள், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்ட அள்ளி பேரூராட்சிகளுக்கு குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் வியாழனன்று (நாளை) மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்வதாலும், பாலக்கோடு, மூங்கில்பட்டி அருகில் பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் அதை சரிசெய்யும் வகையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதா லும் வியாழனன்று (நாளை) முதல் ஜன.25 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது. எனவே, இம்மூன்று நாட்களுக்கு உள்ளூர் நீராதாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும். குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என தெரி விக்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆட்சியர் அனுமதி
நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆட்சியர் அனுமதி நாமக்கல், ஜன.21- நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் விவசாயப் பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுத்துச் செல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரு கிறது. நடப்பு ஆண்டில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட் டில் உள்ள 28 நீர்நிலைகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள 88 நீர்நிலை களிலும் மொத்தம் 116 நீர்நிலைகளில் வண்டல்மண் எடுக்க முதல்கட்டமாக கடந்த ஜூன் மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டது. 3,753 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் 2,977 விவசாயிகளுக்கு வண் டல்மண் எடுக்க வட்டாட்சியரால் அனுமதிக்கப்பட்டு, 90,410 கன மீட்டர் இருந்து வண்டல் மண் எடுக்கப்பட் டுள்ளது. மேலும், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தற்பொழுது கூடுதலாக நீர்வளத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள 33 நீர்நிலைகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள 21 நீர்நிலைகளையும் சேர்ந்த மொத்தம் 170 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் இ - சேவை மையத்தினை அணுகி இணையத்தில் விண்ணப் பித்து வட்டாட்சியரின் அனுமதி பெற்று வண்டல்மண் எடுத்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொலை: 2 பேருக்கு ஆயுள்
நாமக்கல், ஜன.21- மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து இருவரைக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா மூன்று ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், இருக்கூர், ஆவாரங் காடு பகுதியைச் சேர்ந்தவர் தியாகரா ஜன் (35). அதேபகுதியைச் சேர்ந்த இவ ரது நண்பர் செந்தில்குமார் (40). இவர் கள் அவ்வப்போது மதுபானக் கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம். அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு டிச.30 ஆம் தேதியன்று இரவு தியாக ராஜன் வீட்டில் இருந்தபோது, மற் றொரு நண்பரான ஆறுமுகம் (50) மது அருந்த வருமாறு அழைத்தார். இதனை யடுத்து, இருக்கூர் ஊராட்சி மன்ற அலு வலகம் அருகில் அவர் சென்றபோது, அங்கு ஆறுமுகம், செந்தில்குமார், தூய் மைப் பணியாளர் சரவணன் (44) ஆகி யோர் நின்று கொண்டிருந்தனர். அங் குள்ள நூலகம் முன்பாக அமர்ந்து நான்கு பேரும் மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு நான்கு பேரும் தங்களு டைய வீடுகளுக்குச் சென்று விட்டனர். இதனிடையே, இரவு முழுவதும் வாந்தி, வயிற்று போக்கினால் பாதிக்கப்பட்ட தியாகராஜன், செந்தில்குமார் ஆகி யோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களுடன் மது அருந் திய ஆறுமுகத்திற்கும், சரவணனுக்கும் எந்தவித உடல் உபாதையும் ஏற்பட வில்லை. இதுகுறித்து பரமத்தி காவல் துறை யினர் மேற்கொண்ட விசாரணையில், 2019 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்த லின்போது, இருக்கூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவியைப் பிடிக்க ஆறுமுகம் மனைவியும், செந்தில்குமார் மனைவியும் ஆர்வம் காட்டியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், தூய்மைப் பணியாளர் சரவணன் உதவி யுடன் செந்தில்குமாரையும், அவரது நண் பர் தியாகராஜனையும் வரவழைத்து மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இத னைத்தொடர்ந்து ஆறுமுகம், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்த னர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்களன்று விசாரணை நிறைவுற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆறுமுகம் மற்றும் சரவண னுக்கு தலா 3 ஆயுள் சிறைத் தண்டனை யும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
பில்லூர் அணையில் மிதவை பாலம் அமைக்க நடவடிக்கை
அமைச்சர் தகவல் மேட்டுப்பாளையம், ஜன.21- மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதி யில், பரளிக்காடு - பூச்சமரத்தூர் இடையே இரு கிராமங்களை இணைக்கும் வகை யில், மிதவை பாலம் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித் துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள பில்லூர் அணை யின் பின்புறம் உள்ள நீர்தேக்க பகுதி யான பரளிக்காடு என்னும் வனம் சார்ந்த மலைக்கிராம அமைந்துள்ள இடத்தில் வனத்துறை மற்றும் பழங்குடியின மக் கள் இணைந்து நடத்தும் சூழல் சுற் றுலா நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் மிகுந்த இப்பகுதியில் நடைபெ றும் சூழல் சுற்றுலாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வருகை தருகின்றனர். சூழல் சுற் றுலா நடைபெறும் நீர்த்தேக்கத்தின் மறு கரையில் பூச்சமரத்தூர் என்னும் மலைக் கிராமம் உள்ளது. இங்கு தான் சூழல் சுற் றுலா வருவோருக்கான தங்கும் விடுதி யும் உள்ளது. மலைக்காட்டின் நடுவே உள்ள இப்பகுதியில் திங்களன்று மாலை தமிழக சுற்றுலாத்துறை அமைச் சர் ரா.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண் டார். அப்போது, உள்ளூர் மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறை அதிகாரி களுடன் உரையாடி அவர்களது குறை களையும் இப்பகுதி சூழல் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டியவை குறித்து கேட்டறிந்தார். மேலும், மலைவாழ் மக்கள் வசிக் கும் பகுதியான கடம்பன் கோம்பை கிரா மத்தில் மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட உள்ளூர் மக்கள் பரளிக்காடு மற்றும் பூச்சமரத்தூர் கிரா மங்களுக்கு இடையை உள்ள நீர்தேக் கத்தை ஆபத்தான வகையில் பரிசல் மூலம் கடந்து வருவதால் தண்ணீரை கடந்து செல்ல மாற்று ஏற்பாடு தேவை என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் ராஜேந்திரன், பழங் குடியின கிராமங்களை இணைக்கும் வகையில் பரளிக்காடு மற்றும் பூச்ச மரத்தூர் இடையே நீர்தேக்க பகுதியில் மிதவை பாலம் அமைக்க தமிழக முதல மைச்சரின் அனுமதியோடு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடம்பன் கோம்பை மலை கிராமத்தில் மின்சார வசதி ஏற்படுத்தித்தர மின்துறை அமைச் சர் செந்தில் பாலாஜியின் கவனத்திற்கு கொண்டு சென்று மின்வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும், என்றார்.
கூடலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
கூடலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு உதகை, ஜன.21- கூடலூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக னங்களை போலீசார் அகற்றி வருவதால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் நகரப் பகுதியில் இருந்து மைசூர் கேரள உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராள மான சரக்கு லாரிகள் செல்கின்றன. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று கூடலூரில் இருந்து கேரள மாநிலத்திற்கு சரக்கு லாரி ஒன்று சென்றபோது, கூடலூர் மனதுர்கா பகுதியைச் சேர்ந்த சாமுவேல் மற்றும் அவரது மகன் விகில் வர்ஷன் (7) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த னர். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில், சரக்கு லாரி ஏறி தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாள்தோறும் கூடலூர் நகரில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங் களால் இடையூறு ஏற்படுவதோடு, இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதற்கு கண்ட னம் தெரிவிக்கும் விதமாகவும், உடனடியாக போக்குவரத் துக்கு இடையூறாக, சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக் கப்பட்டுள்ள வாகனங்களை போக்குவரத்து போலீசார் உடன டியாக அகற்ற வேண்டும், என தெரிவித்து போராட்டத்திற்கு தயாராகினர். அதன் எதிரொலியாக கூடலூர் தேசிய நெடுஞ் சாலையில் இருபுறமும் உள்ள வாகனங்களை போலீசார் அகற்றி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பாலக்காடு ரயில் தாமதம்: திருப்பூர் பயணிகள் அவதி
பாலக்காடு ரயில் தாமதம்: திருப்பூர் பயணிகள் அவதி திருப்பூர், ஜன.21 - பாலக்காடு பகுதியில் இருந்து திருச்சி வரை செல்லக்கூ டிய பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் இஞ்சின் கோளாறு காரணமாக 1.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு திருப்பூ ருக்கு காலை 10.35 மணிக்கு வந்தது. இதனால் அலுவலர் கள் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து திருச்சி வரை செல்லக்கூடிய பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பி ரஸ் (16844) ரயில் தினந்தோறும் பாலக்காடு ரயில் நிலையத் திலிருந்து துவங்கி வாளையார், எட்டிமடை, மதுக்கரை, போத் தனூர், கோவை ஜங்ஷன், கோவை வடக்கு, பீளமேடு, சோமனூர் வழியாக திருப்பூர் வந்து திருச்சி வரை செல்கி றது. இதில், கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப் பூரில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலா ளர்கள், அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என ஏராள மானோர் பயணிக்கின்றனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் தினமும் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 9.08 மணிக்கு திருப்பூர் வந்தடையும் செவ்வாயன்று காலை இஞ்சின் கோளாறு ஏற்பட்டதால் பாலக்காடு பகுதியிலேயே 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு திருப்பூருக்கு 10.35 மணியளவில் வந்தடைந்தது. இதன் காரணமாக பணிக்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சரி யான நேரத்திற்கு தங்கள் பணிக்குச் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
கஞ்சா விற்பனை 5 பேர் கைது
திருப்பூர், ஜன.21- திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற் பனை செய்த ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்த னர். மேலும், இவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமு தல் செய்தனர். ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தி திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மாவட்ட நிர்வாகமே ஜல்லிகட்டு நடத்தக்கோரி மனு
தருமபுரி, ஜன.21- தடங்கம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழாவை மாவட்ட நிர்வாகம் நடத்தக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், நார்த்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் என்.எஸ். கலைச்செல்வன், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஆகியோர், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், தடங் கம் கிராமத்தில் தனியார் அமைப்பு, அர சியல் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு விழா புதனன்று (இன்று) நடைபெற உள்ள தாக அறிவிக்கை செய்யப்பட்டு வருகி றது. தனியார் அமைப்புகள், அரசியல் கட்சி சார்பில் இத்தகைய பாராம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படும் போது, அரசின் உரிய வழிகாட்டுதல்கள் பின் பற்றப்படுவதில்லை. முற்றிலும் வணிக நோக்கில் மட்டுமே போட்டிகள் நடத்த வாய்ப்புள்ளது. மேலும், கடந்த காலங் களில் தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக் கட்டு போட்டியில் காளை முட்டி சிறுவன் உயிரிழந்தது, காளைகள் காயமடைந் தது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜல்லிக்கட்டு விழாவை, வழிகாட்டுதல் களைப் பின்பற்றி காளைகள், மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் மாவட்ட நிர்வாகமே நடத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி நடத்தினால் நடவடிக்கை தடங்கம் கிராமத்தில் புதனன்று (இன்று) ஸ்ரீமண்டு மாரியம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக துண்டுப் பிரசுரங் கள் மற்றும் வாட்ஸ் ஆப் செய்தி உலா வருவதாக தெரிகிறது. அரசின் நிலை யான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக உரிய வழிமுறையாக அரசாணை பெற்றும், தொடர்ந்து மாவட்ட நிர்வாகத் தின் ஒப்புதலுக்கு பின்னரே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப் படும். அதன்படி, புதனன்று தடங்கம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதியேதும் வழங்கப்படவில்லை. எனவே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டால், தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள் ளார்.