இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்;
சாகித்ய அகாடமியின் தேசிய நிர்வாக குழு நேற்றைய தினம் கூடியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதாளர்களை தேர்வு செய்ய அந்தந்த மொழிக்கான நடுவர் குழுவின் பரிந்துரைகளுக்கு தேசிய நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஒன்றிய கலாச்சார அமைச்சகம் தலையீட்டு நிர்வாக குழுவின் முடிவுகளை நிறுத்திவைத்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட சாகித்ய அகாடமி தனது முடிவை அறிவிக்க திறனின்றி மெளனம் காப்பதை ஏற்க முடியாது. உங்களது மெளனமும், இயலாமையும் செம்மாந்த இலக்கிய மரபுக்கும், அகடமியின் புகழ் மிக்க வரலாற்றுக்கும் செய்யும் துரோகமாகும். அகடமியின் நிர்வாக குழு தனது முடிவுகளை துணிவோடு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டின் புகழ்மிக்க கலாச்சார நிறுவனங்களையெல்லாம் மோடி அரசு தனது காலடியில் மண்டியிடச்செய்யும் வேலையை அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது.
இலக்கியத்தையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து, நமது கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதலை எதிர்க்க முன்வர வேண்டும். என பதிவிட்டுள்ளார்
