tamilnadu

img

இராஜபாளையம் அருகே குடிபோதையில் ஒருவர் கொலை

இராஜபாளையம் அருகே குடிபோதையில் ஒருவர் கொலை  

இராஜபாளையம், டிச.19- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தை சேர்ந்தவர்  வேல்முருகன் (வயது 35), விசைத்தறி தொழிலாளி. இவரும் அவருடைய நண்பரான வேல்முருகன் என்பவர் மகன் பாலமுருகன் என்பவரும் சமுசிகாபுரம் ஊரணி அருகே இரவு 12 மணிக்கு மேல் ஒன்று சேர்ந்து மது அருந்தினார்களாம். குடிபோதையில் ஒருவருக்கொருவர் பிடித்து தள்ளி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் வேல்முருகன் கீழே விழுந்ததாக தெரிகிறது.  அது சமயம் பாலமுருகன் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வேல்முருகன் தலையில் போட்டதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்  இறந்தார். நள்ளிரவு இந்த சம்பவம் அறிந்து ராஜபாளையம் தெற்கு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.