அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வாலிபர் சங்கம் போராட்டம்
விருதுநகர், டிச.,19- தமிழக அரசு ,அரசுத்துறைக ளில் உடனடியாக ஒரு லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரந்தரப் பணியிடங்களை அவுட் சோர்சிங் முறையாக மாற்று வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் டிசம்பர் 19 அன்று தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் மூளிப்பட்டி அரண்மனை அருகே நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் மனோபிரியா தலை மையேற்றார். துவக்கி வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட துணைத் தலைவர் எம்.முத்துக்குமார் பேசினார். போ ராட்டத்தை ஆதரித்து முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பி.மாரி யப்பன், எம்.ஜெயபாரத், மாணவர் சங்க மாவட்டசெயலாளர் ஆனந்த கண்ணன், ஏஐபிடிபிஏ மாவட்ட பொருளாளர் எம்.பெருமாள்சாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் என்.உமாமகேஸ்வரி ஆகியோர் பேசினர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செ.பரமேஸ்வரன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் நல்லுசாமி, நகரத் தலைவர் எம். குமார், மாவட்ட துணைச் செயலா ளர் கருப்பசாமி, பொன்பாண்டி, ஆன்ட்ரூ, சத்யஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முதுகுளத்தூர் தாலுகா செய லாளர் மு.வைஷ்ணவி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மாரிக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், நிர்வாகிகள் ஜெயக்குமார், அப்துல் சித்திக், அருண், தலைவர் பூமிநாதன், ஜோதிபாஸ் ஆகியோர் பேசினர். விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் வி.மயில்வாகணன் ஆத ரித்துப் பேசினார். மாணவர் சங்க முன்னாள் மாவட்ட செயலா ளர் வி.காசிநாததுரை நிறைவு ரையாற்றினார்.
