states

img

அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழப்பு!

அசாம் மாநிலத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், 8 யானைகள் உயிரிழந்தன. 
மிசோரத்தின் சாய்ரங்கில் இருந்து புதுதில்லி நோக்கி சென்றுகொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 2.17 மணிக்கு, அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 8 யானைகள் உயிரிழந்தன. 
ரயிலில் பயணித்தவர்களும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; ஆனால், ரயிலின் 5 பெட்டிகள் தண்டம் புரண்டது. விபத்து பகுதியில் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.