சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு
விபி ஜி ராம் ஜி மசோதாவால் ஊரக வேலை திட்டத்துக்கான நிதிச் சுமையை மாநில அரசுகளுடன் 60-40 என்ற சதவீதத்தில் ஒன்றிய அரசு பகிர்ந்து கொள்ளும் வகையில் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசின் பங்களிப்பு அதிக சதவீதத்தில் இருப்பதால், ஆந்திரப் பிரதேசம் பெருமளவில் பாதிக்கப்படும்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பூபேஷ் பாகேல்
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலை மிகவும் கவலையளிக்கிறது. தந்தேவாடாவில் காவல்துறை டிஎஸ்பி தோமேஷ் வர்மா மீது பட்டப்பகலில் மர்மநபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக சுமார் 80 கி.மீ., தூரம் வரை தோமேஷை பின்தொடர்ந்து வந்து தாக்கியுள்ளனர். இது மிகவும் மோசமானது.
மேற்கு வங்க அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா
பிரதமர் மோடியும், பாஜகவும் மேற்கு வங்க மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். மாநிலத்தில் பலர் குடியுரிமைக்காக விண்ணப்பித் திருந்தனர். குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கே பாஜக அவர்களை ‘வங்கதேசத்தவர்’ என்று சொல்கிறது. இல்லையென்றால் ஊடுருவல்காரர்கள் என்று கூறுகிறார்கள்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் முகமது இக்பால்
முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு நிதிஷ் குமார் ஒரு பெண்ணின் ஹிஜாப்பை இழுக்கிறார். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நிதிஷ் குமாரின் இந்த அடாவடி சம்பவத்தால் நாடு முழுவதும் உள்ள பெண்கள் மிகுந்த சங்கடத்தை உணர்கிறார்கள்.
