சென்னை: இரண்டு நாள் பயணமாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை சென்னையி லிருந்து நெல்லை புறப்பட்டார். நெல்லை சென்ற முதல மைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஞாயிற்றுக்கிழமை காலை ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங் காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அருங்காட்சியகம் பொருநை நதி ஆற்றங்கரை நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 67.25 கோடியில் 13.2 ஏக்கர் பரப்பளவில், 54 ஆயி ரம் சதுர அடியில் இந்த அருங்காட்சியகம் பிரம்மாண்ட மாக கட்டப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அகழ்வா ராய்ச்சி பணிகள், முன்னோர்களின் வணிகம், வாழ்வியல் முறை, விவசாயம் போன்றவை குறித்து தத்ரூபமாக திரைகளில் காட்சிப்படுத்த 3டி மற்றும் 5டி திரையரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் வளா கத்தில் பசுமையான புல்வெளி தரைகள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பழங்கால அரண் மனை பாணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சி யகம் மன்னர்கள் காலத்தில் இருந்த பிரம்மாண்ட அரண்மனைகளை நினைவூட்டுகிறது. அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற் கும் முதலமைச்சர், அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.72.10 கோடியில் கட்டப்பட்டுள்ள இதயம், நரம்பியல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிகிச்சைக் கான மேம்பட்ட கட்டடத்தை திறந்து வைத்து, 44,924 பய னாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்குகிறார்.