நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு” மலரினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.முகமது ஷா நவாஸ், வி.பி.நாகைமாலி, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
