tamilnadu

img

தீவிர மூடுபனி தில்லியில்  97 விமானங்கள் ரத்து கடந்த 3 நாட்களாக காற்று மா

\தீவிர மூடுபனி தில்லியில்  97 விமானங்கள் ரத்து கடந்த 3 நாட்களாக காற்று மாசு பாடு மற்றும் பனிப்பொழிவுக்கு நிகரான தீவிர மூடுபனி காரண மாக தில்லியில் இயல்பு நிலை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடு களுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும் சாலை, ரயில் மற்றும் விமானப்  போக்குவரத்துகள் தில்லியில் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஞாயிறன்றும் தில்லி  விமான நிலையத்தில் மூடுபனி காரண மாக மொத்தம் 97 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதுதொடர்பாக விமான  கண்காணிப்பு வலைத்தளமான பிளை ட்ரேடார் (Flightradar24) வெளியிட் டுள்ள தகவல்களின்படி,”தில்லி விமான நிலையத்தில் 48 வருகைகள் மற்றும் 49 புறப்பாடுகள் என் 97 விமானங்கள் ரத்து  செய்யப்பட்டன. 200க்கும் மேற்பட்ட விமா னங்கள் தாமதமாகின” என அதில் கூறப்  பட்டுள்ளது. சண்டிகர் ஹரியானாவில் நிலநடுக்கம் ஹரியானாவின் ரோஹ்தக் பகுதி யில் ஞாயிறன்று மதியம் 12.13  மணியளவில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின்படி, ரோஹ்தக் மையப் பகுதியில் 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த மிதமான நில நடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்  கின. விடுமுறை நாள் என்பதால் வீட்டில்  இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு  தெருக்களில் கூடினர். நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிரிழப்பு அல்லது சேதம்  குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தில்லியிலும் உணரப்பட்ட தாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி  மக்கள் அச்சமடைந்தனர். லக்னோ பாஜகவின் “ஒரே நாடு, ஒரே தொழிலதிபர்” கொள்கை நாட்டிற்கு ஆபத்தானது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் எச்சரிக்கை பாஜகவின் “ஒரே நாடு, ஒரே தொழிலதிபர்” கொள்கை நாட்டிற்கு ஆபத்தானது என “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலை வர் அகிலேஷ் எச்சரிக்கை விடுத்துள் ளார். இதுதொடர்பாக ஞாயிறன்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்  மேலும் கூறுகையில்,”பாஜக அரசாங்கங்  கள் “ஒரே நாடு, ஒரே தொழிலதிபர்” என்ற  நிகழ்ச்சி நிரலை தீவிரமாக பின்பற்று கிறது. மேலும் நாட்டின் ஒவ்வொரு முக்கிய வணிகத்தையும் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே குவிப்பதை நோக்க மாகக் கொண்ட ஒரு மாதிரியில் பாஜக  செயல்பட்டு வருகிறது. இது அக்கட்சி யின் நன்கொடைக்காக அல்ல. நாட்டின்  ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப் பையும் ஒரு சில தனிநபர்களின் கட்டுப்  பாட்டில் கொண்டு வருவதே பாஜக தலைமையின் நோக்கம் ஆகும். அரசி யல், பொருளாதாரம் அல்லது சமூகம் என எந்தத் துறையாக இருந்தாலும் ஏகபோக நடைமுறைகள் உள்ளன. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல. எந்தவொரு நாட்டுக்கும் ஆபத்தானவை தான். அத னால் இந்த ஏகபோக நடைமுறை கொண்ட ஆட்சியை நாடே கூட்டாக எதிர்க்க வேண்டிய நேரம் இது” என அவர் அழைப்பு விடுத்தார்.