states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி

வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் வளர்ச்சி குறித்த கூற்றுகளின் வெற்றுத்தன்மையும்  அவர்களின் பிளவுபடுத்தும் அரசியலும் அம்பலமாகும். நேமம் சட்டமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற பாஜக எடுக்கும் முயற்சி எக்காலத்திலும் நிறைவேறாது.

மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்

அசாமை கிழக்கு பாகிஸ்தானுடன் இணைக்கும் திட்டத்தில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட இணைந்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். மோடி அரசு 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால் பிரதமர் மற்றும் அவரது கூட்டணிக் கட்சியினர் நிகழ்த்தும் ஒவ்வொரு பேச்சும், எதிர்க்கட்சியில் இருப்பது போன்றே உணர்த்துகின்றன.

மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியது ஒரு தெளிவான சர்வாதிகாரம் ஆகும். காந்தியை மீண்டும் ஒருமுறை கொன்றுள்ளது பாஜக அண்ட் கோ. நாடாளுமன்றத்தை மௌனமாக்குவது, ஏழைகளுக்கு எதிரான கருப்புச் சட்டங்களைத் திணிப்பது தான் நரேந்திர மோடியின் உண்மையான மனநிலை.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் அனிஷ் கவாண்டே

நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை. கண்டிப்பாக எதிர்க்கட்சிகள்  சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது.