tamilnadu

மதவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்!

மதவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்

புதுதில்லி, டிச. 20 - வங்கதேசத்தில் மத வன்முறையா ளர்களின் நடவடிக்கைகளை, அங்குள்ள இடைக்கால அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: வங்க தேசத்தில் சமீபத்தில் நடந்துள்ள மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவ லையைத் தெரிவித்துக் கொள்கிறது. ஊடக நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் வங்க தேசத்தின் இடைக்கால அரசாங்கத்தை  வலியுறுத்துகிறது.  மிகவும் மதிக்கப்படும் இரண்டு கலாச் சார நிறுவனங்களான ‘சாயானோட்’ மற்றும்  ‘உடிச்சி’ ஆகியவற்றின் மீது மிகவும் கொடூர மான முறையில் தாக்குதல் நடத்தியிருப்பது கோழைத்தனமானது. மத அடிப்படைவாத சக்திகள், சமூ கத்தை மத ரீதியாகப் பிளவுபடுத்தி, சிறு பான்மையினர் மற்றும் தங்களுக்குச் சாதக மற்ற ஊடகங்கள் மீது தாக்குதல் தொடுத்து, வங்க தேசத்தில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என்பது தெரிகிறது. மத அடிப்படைவாத சக்திகளின் வளர்ச்சி, வங்க தேசம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எல்லையின் இருபுற மும் உள்ள மதவெறி சக்திகள், ஒன்றையொன்று தூண்டிவிட்டு, இந்தச் சூழ்நிலையைப் பயன் படுத்தி மக்கள் மத்தியில் வெறுப்பை மேலும் தூண்ட முற்படலாம். சமூக நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தையும் பேணுவதே தற்போதைய அவசியமாகும். தேர்தல்கள் சுதந்திரமாக நடப்பதை உறுதிசெய்ய வேண்டும்! இந்தச் சோதனையான காலங்களில், வங்க தேச மக்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்றும், 1971 விடுதலைப் போராட்டத்தின் விழுமி யங்களைக் கட்டிக்காப்பார்கள் என்றும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை தெரிவித்துக் கொள்கிறது. மதவெறி சக்திகள் கட்டுப்படுத்தப் படுவதையும், வன்முறையில் ஈடுபட்ட கயவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதையும் இடைக்கால அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். மேலும், மக்கள் அச்சமின்றி தங்கள் விருப்பத்தை வெளிப் படுத்த அனுமதிக்கும் வகையில், தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை யும் அது உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக் கையில் கோரியுள்ளது.