tamilnadu

ஜன. 8 முதல் 24 வரை சென்னை புத்தகக் காட்சி எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு கலைஞர் பொற்கிழி விருது அறிவிப்பு!

சென்னை, டிச. 20 - சென்னை 49-ஆவது புத்தகக்காட்சி ஜனவரி 8 அன்று துவங்கி 21ஆம் தேதி  வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.  1000 அரங்குகளுடன், தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் மட்டுமன்றி உலகளவில் புகழ்பெற்ற பதிப்பகங்கள், பல்வேறு மாநிலங்களை சார்ந்த விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் புத்தகக் காட்சியில் பங்கேற் கும் இந்த புத்தகக் காட்சியை தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின்  தொடங்கி வைக்க உள்ளார். ஒவ்வொரு புத்தகக் காட்சியின் போதும், கலை ஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது’ 6 பேருக்கு வழங்கப் படுவதாக புத்தக்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ்.  சண்முகம், செயலாளர் எஸ். வைரவன், பொருளா ளர் அரு. வெங்கடாசலம் ஆகியோர் அறிவித்துள்ள னர்.

 இதில், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கத்தின் மாநிலத்  துணைத்தலைவர் ஆதவன்  தீட்சண்யா (சிறுகதை)  கலைஞர் பொற்கிழி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். கவிஞர் சுகுமாறன்  (கவிதை). இரா. முருகன்  (நாவல்), பேரா. பாரதிபுத்தி ரன் (உரைநடை), கருணா பிரசாத் (நாடகம்), வ. கீதா  (மொழிபெயர்ப்பு) ஆகியோ ருக்கும் கலைஞர் பொற் கிழி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவருக் கும் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் விருதுகளை வழங்கி உரையாற்ற உள்ளார். துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  அமைச்சர்கள் மா. சுப்பிர மணியம், அன்பில் மகேஸ்  பொய்யாமொழி உள்ளிட் டோர் கலந்து கொள்ள உள்ளனர்.