சாதி ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பான நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்திடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆணைய உறுப்பினர்கள் முனைவர் வி. பழனிக்குமார் ஐஏஎஸ் (ஓய்வு), முனைவர் எஸ்.ராமநாதன் ஐபிஎஸ் (ஓய்வு) ஆகியோர் உடனிருந்தனர். மாதர் சங்கத்தின் மாநில தலைவர் ஜி.பிரமிளா, பொதுச் செயலாளர் அ.ராதிகா, மாநில செயற்குழு உறுப்பினர் உ.நிர்மலாராணி, வழக்கறிஞர் திருமூர்த்தி, சமூக செயல்பாட்டாளர் நர்மதா, முனைவர் சுசீந்ரா, முனைவர் ரேவதி ஆகியோர் பரிந்துரைகளை வழங்கினர்.
