பள்ளிவிளையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் உடனடியாக சீரமைத்திடுக
நாகர்கோவில், டிச. 22 நாகர்கோவில் பள்ளிவிளையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக போகிறது. இதனை மாந கராட்சி நிர்வாகம் கண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிவிளை, 6-வது வார்டு மூன்லைட் சந்திப்பில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் குழாய் உடைந்துதண்ணீர் வீணாகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை. கிடைக்கும் நீரில் சகதி கலந்து வருவதாகவும் புகார் அளிக் கின்றனர். எனவே அந்த குடிநீர் குழாயை உடனே சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
