டிச.29 இல் குழித்துறை நகராட்சி கூட்டம் குழித்துறை
, டிச.22 குழித்துறை நகராட்சி கூட்டம் வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது இந்தக் கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமை வகிக்கிறார். ஆணையாளர் சுவிதா ஸ்ரீ முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் குறள் செல்வி மற்றும் அலுவலர்கள் கவுன்சி லர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதம் நடைபெறுகிறது. மேலும் நகராட்சி பகுதியில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகளான சாலை ,குடிநீர், வடிகால் வசதி, மின் விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும் குழித்துறை நகராட்சியை அடிப்படை மற்றும் வளர்ச்சிப் பணிகளில் தன்னிறைவு பெற்ற நகராட்சியாக உரு வாக்கும் வகையில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வர கவுன்சிலர்கள் அதிகாரிகள் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.இது தொடர்பான தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பவும் முடிவு செய்யப் பட்டுள்ளது..