நாகர்கோவில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு சாக்கடை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் சீரமைப்பு
நாகர்கோவில்,டிச. 22- நாகர்கோவில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு சாக்கடை நீர் தேங்கி சுகாதாரக் கேட்டை விளை வித்து வந்ததை முன்னிட்டு அதனை சீரமைக்க கோரி நாகர்கோவில் மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு மனுக் கள் கொடுத்தும் ஆர்ப்பாட் டமும் நடத்தியதை முன்னி ட்டு, அப்பகுதி சீரமைக்கப் பட்டது. நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் அருகே பொது மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியாகும், வடசேரி காவல் நிலையம், மாவட்ட தோட்டக் கலைத்துறை அலு வலகம், மாவட்ட உணவுத் துறை அலுவலகம், புகழ் பெற்ற கிருஷ்ணன் கோயில், மாவட்ட சுகாதார அலுவல கம் உள்ளிட்ட பல்வேறு நிறு வனங்கள், கடைகள் உள்ளன. இதில் மழை நேரத்தில் இந்த சுகாதாரத்துறை அலு வலகம் முன்பு உள்ள சாக்க டை கழிவு நீரோடையில் தண் ணீர் செல்ல முடியாமல், கழிவு நீரோடை நிரம்பி சாக் கடை கழிவு நீர் ரோட்டில் சென்றும், அந்த அலுவல கம் முன்பு தேங்கியும் மக்கள் மற்றும் அங்கு பணிபுரிப வர்கள் செல்லமுடியாத நிலையில் கிடந்தது. இதனை சீரமைக்க கோரி நாகர்கோவில் மாநகர சிபிஎம் செயலாளர் எஸ்.அருணாசலம் தலை மையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரி வித்தும், மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படாமல் அப்படியே கிடந்து சுகாதாரச் சீர் கேட்டை விளைவித்தது. அதனால் கிருஷ்ணன் கோவில் சிபிஎம் கிளைகள் சார்பில்அதனை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ஆர்ப்பாட்டத்தை தொ டர்ந்து அங்குள்ள கழிவு நீரோடை தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டதோடு அங்கு கிடங்கில் மாநகராட்சி சார்பில் மண் கொண்டு நிரப்பியும். தீர்வு காணப் பட்டது. இதனால்பல மாதங் களாக சுகாதாரச் சீர்கே ட்டை விளைவித்த பகுதி சீர மைக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சிபிஎம்வினரு க்கு நன்றியை தெரிவித்த னர்.
