வடசேரியில் மழை நீர்வடிகால் சீரமைக்கும் பணி நாகர்கோவில் மேயர் துவக்கி வைத்தார்
நாகர்கோவில். டிச. 22- நாகர்கோவில் மாநகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட வடசேரி ஓட்டு புரை தெரு மாவட்ட நூலகம் அருகில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தார். உடன் துணைமேயர் மேரி பிரின்ஸிலதா, மண்டல தலைவர் ஜவஹர், மாமன்ற உறுப்பினர் கலாராணி, பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
