tamilnadu

img

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மார்கழி பெருந்திருவிழா 18 ஊர் தலைவர்களுக்கு அழைப்பு

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மார்கழி பெருந்திருவிழா 18 ஊர் தலைவர்களுக்கு அழைப்பு

நாகர்கோவில். டிச. 22- சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மார்கழிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு 18 ஊர் தலைவர்களுக்கு மஞ்சள், வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோ யில் மார்கழிப் பெருந்திருவிழா டிச. 25ம் தேதி வியாழக்கிழ மை மார்கழி 10 அன்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமா கிறது.அதனை ஊர் பிடாகை தலைவர்களுக்கு தெரிவிக் கும்படி 18 பிடாகை ஊர் தலைவர்களுக்கு மஞ்சள் மற்றும் திருவிழா அழைப்பிதழ் வழங்கி வரவேற்கும் நிகழ்ச்சி  திங்களன்று காலை சுசீந்திரம் கோயில் சித்திரசபையில் சிறப்பாக நடைபெற்றது.  மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி மன்னர் காலத்தில் இருந்து பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்ச்சி. இதில் தாணுமாலய சுவாமி கோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரியவர்களை அழைத்து பத்து நாள் திருவிழா விற்கான நிகழ்ச்சி நிரல் வெற்றிலை பாக்குடன் அவர்க ளுக்கு வழங்கி பத்து நாள் திருவிழாவை மிக விமர்சி யாக நடத்தித் தர அழைக்கும் நிகழ்ச்சியாகும்.