வட்டமடித்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவித்த பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் அடுத் ்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பிரதமர் மோடி அடிக்கடி மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று வருகிறார். இந்நிலையில், சனியன்று நாடியா மாவட்டத்தில் உள்ள தகெர்பூர் பகு தியில் நடைபெறவிருந்த பொதுக்கூட் டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பினார். ஆனால் அடர் மூடுபனி மற்றும் மோச மான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் ஹெலிகாப்டர் வட்டமடித்தது. பாதுகாப்பு கருதி மீண்டும் கொல்கத்தா விமான நிலை யத்திற்கே ஹெலிகாப்டர் வந்தது. இதனால் பிரதமர் மோடி கடும் கோபமடைந்ததாகவும், அதன்பிறகு காணொலி வாயிலாக மோடி பேசிய தாகவும் செய்திகள் வெளியாகின. தொ டர்ந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் சனியன்று மாலை அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
