tamilnadu

img

இராமநாதபுரத்தில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கம்

இராமநாதபுரத்தில்  1,17,364 வாக்காளர்கள் நீக்கம்

இராமநாதபுரம், டிச.19- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.  பின்னர் தேர்தர் அலுவலர் கூறு கையில், கணக்கீட்டுப்படிவம் பூர்த்தி செய்து மீளப் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 51439, இரட்டைப் பதிவு 9424, முகவரியில் இல்லாதவர்கள் மற்றும் நிரந்த ரமாக இடம் பெயர்ந்தவர்கள் 56,501, ஆக மொத்தம் 1,17,364 வாக்கா ளர்களின் பெயர்கள் நீக்கம் செய் யப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்த வாக்கா ளர் பட்டியல் வெளியிடும் பணியின் ஒரு பகுதியாக 1200 வாக்காளர்க ளுக்கு இடம் பெற்றிருந்த வாக்குச்சா வடிகளை மறுசீரமைப்பு செய்யப் பட்டு, புதியதாக 140 வாக்குச் சாவடி நிலையங்கள் உருவாக்கப்பட்டு தற்போது 1514 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளது. உரிமை கோரல் மற்றும் மேல் முறையீட்டு காலமான 19.12.2025 முதல் 18.01.2026 வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க (படிவம் 6), நீக்க (படிவம் 7), முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் மாற்று புதிய அடையாள அட்டை பெற்றிடவும் (படிவம் 8) மனுச் செய்து கொள்ள தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இவ்வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகா ரப்பூர்வ இணையதளமான www.elections.tn.gov.in மற்றும் www. nvsp.in -ல் பொதுமக்கள் அனைவ ரும் சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.