100 நாள் வேலைதிட்டத்தை சிதைக்கும் மோடி அரசை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் மற்றும் வத்திராயிருப்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம். சுந்தரபாண்டியன் .ஒன்றிய செயலாளர் எம்.கே. பழனிச்சாமி ஆகியோர் பேசினர். வத்ராயிருப்பு ஒன்றியம் சேதுநாராயணபுரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி தலைமை தாங்கினார் .மாவட்ட பொருளாளர் சி.ஜோதிலட்சுமி, மாவட்ட நிர்வாகி சி.ஜெயக்குமார் விளக்கி பேசினர்.
