நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளி யம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படு கிறார். முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைக் கூறி வருகிறார். மேலும், பெரியார் சிந்தனைகளை மழுங் கடிக்கும் பணியில் சங்கிகள் கூட்டத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார். இதனால், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில், நாதக-வில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. தமிழ்த் தேசிய பாதை யில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்தேன். ஆனால், அந்த பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது. இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.