tamilnadu

img

சுடுகாட்டில் குப்பைகளை கொட்டும் அவலம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், செட்டித் தாங்கல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தண்டலம் ஏரி சுடுகாட்டில் செட்டித்தாங்கல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சேமிக்கப்படும் மக்கும், மக்காத  குப்பைகள், மருத்துவக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை சுடுகாடு உள்ள  பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் சுற்றியுள்ள பகுதி களில் துர்நாற்றம் வீசி வருகிறது. ஏரிகளில் தூர்வாரி நீர் நிலைகளை சேமித்து காத்து வரும் இந்த சூழலில் மக்கும், மக்காத குப்பை கிடங்கு மேம்படுத்தாமல் ஏரியின் ஓரமாக பொதுமக்கள் பயன் படுத்தி வரும் சுடுகாட்டில் குப்பைகளை கொட்டுவதால் மிகுந்த துர்நாற்றம் எழுதுவதுடன் பொதுமக்கள் சிரமப் பட்டு வருகின்றனர். மேலும் அதற்காக ஒதுக்கப்படும் நிதி என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.