திருவண்ணாமலையில் 11 நாட்களாக நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு பெற்றது. திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகே உள்ள ஈசான்ய மைதானத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரைக்கும் 11 நாட்க ளாக மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில், 100 புத்தகக் கடைகளுடன் கூடிய புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தமிழகத் தின் தலைசிறந்த எழுத்தா ளர், பேச்சாளர், சிந்தனை யாளர்களின் சொற்பொழி வுகள் நடைபெற்றது. குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவுக் கூடங்கள், அரசு துறை அரங்குகள் என தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. புத்தக கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு வழங்கப்பட்டது. புத்தகத் திருவிழாவின் 16 வது எண் அரங்கில் பாரதி புத்தகால யத்தின் புத்தக அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கில் பொது அறிவு, அறிவியல், சிறுவர் நூல்களை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். புத்தகத் திருவிழாவின் 10 ஆம் நாள் ஞாயிறன்று (பிப்.23) ‘இங்கிருந்தும் தொடங்கலாம்’ என்ற ஆயிரம் வாசிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி நிகழ்ச்சியில், வாசிப்பா ளர்களுக்கு புத்தகங்களை வழங்கி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு சிறப்புரையாற்றினார், சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மூத்த திரைக் கலைஞர் சிவக்குமார், எழுத்தாளர் பவா செல்லத் துரை ஆகியோர் உரை யாற்றினர். புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான பிப்.24 அன்று ‘காலந்தோறும் தமிழ்’ என்ற தலைப்பில் எழுத்தா ளர் பெரணமல்லூர் சேகரன், ‘வெளிச்ச பூமியில் புத்தக நிலவு’ என்ற தலைப்பில் முத்துவேல் ராமமூர்த்தி, ‘எல்லா உயிரும் இன்ப மெய்துக’ என்ற தலைப்பில் டி.எம்.சிவக்குமார் ஆகி யோர் உரையாற்றினர்.