tamilnadu

img

மதுபான பாட்டில்கள் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

மதுபான பாட்டில்கள் ஏற்றி இறக்கும்  தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் 

டில்கள் ஏற்றி இறக்கும் தொழி லாளர்கள் சங்கத்தினர் (சிஐடியு) வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் சிப்காட்டில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் உள்ளது. இங்கு கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு தேவை யான மதுபானங்களை இறக்கி வைப்பதும், அவைகளை ஏற்றி கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.  இங்கு, மது பானம் ஏற்றி கடைகளுக்கு அனுப்பும் பணி யில் 87 தொழிலாளர்கள் கடந்த பல வருடங்களாக வேலை செய்து வருகின்ற னர்.  ஏற்கனவே, மதுபானங்கள் ஏற்றுவதற்கு கூலி உயர்வு கேட்டு வரும் நிலையில், தற்போது வழங்கப்பட வேண்டிய கூலியை யும் பல மாதங்களாக முறையாக கிடைப் பதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் புதிதாக தொழிலா ளர்களை உள்ளே புகுத்தி மதுபானங்கள் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதால், ஏற்கனவே பணியாற்றி வந்த தொழி லாளர்கள் அதிருப்தி அடைந்த சிஐடியு டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி தொழி லாளர் சங்கத்தினர் திங்களன்று (பிப்.24)  திடீ ரென்று வேலை நேரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில், வெளி ஆட்களை உள்ளே அனுமதிக்க முடியாது  என்று தொழிலாளர்கள் சார்பில் தெரிவிக்க ப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு வெளி ஆட்களை திருப்பி அனுப்பியதன் அடிப்படை யில் மீண்டும் வேலை நிறுத்தத்தை கை விட்டு பணி தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.சுப்ப ராயன், தலைவர் டி.கலியமூர்த்தி, செய லாளர் எஸ்.ரமேஷ், பொருளாளர் அய்ய னார், சிஐடியு இணைச் செயலாளர் திரு முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.