சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கிராமத்தில் சம்பந்த மூர்த்தி என்பவர் வீட்டுத் தோட்டத்தில் புகுந்த 13 அடி நீளமும், சுமார் 550 கிலோ எடையும் கொண்ட முதலையை வனசரக அலுவலர் பாஸ்கர் தலைமையில் வன பிரிவு அலுவலர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் அன்புமணி, வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் பிடித்தனர். பிறகு, முதலையை அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர்.