தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையில் 33 இடங்களிலும், மதுரையில் 52 இடங்களிலும், கடலூரில் 49 இடங்களிலும், கோவையில் 42 இடங்களிலும், தஞ்சையில் 40 இடங்களிலும் திறப்பு. முதல்வர் மருந்தகங்களில், சந்தை விலையை விட 75% குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்.
முதல்வர் மருந்தகங்களில் ஜெனிரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும். இவைகளுக்கு மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து மருந்துகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.